பட்டினியால் இறந்தார் ஓய்வுபெற்ற மருத்துவர்: சடலத்துடன் 2 மாதம் வசித்த சகோதரர் மீட்பு; உ.பி.யில் பரிதாபம்

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் பட்டினியால் வாடிய ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது கூட தெரியாமல் அவரது சடலத்துடன் வசித்து வந்த அவரது சகோதரரை சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீஸார் மீட்டுள்ளனர்.

டெல்லி அருகே உள்ள மீரட்டின் சாஸ்திரி நகரில் உள்ள ஒரு பங்களா பல நாட்களாக திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. அங்கிருந்து துர்நாற்றமும் வீசியதால் அப்பகுதிவாசிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த சனிக் கிழமை காலை அங்கு வந்த போலீஸார், அந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென் றுள்ளனர். அங்குள்ள கட்டிலில் ஹரேந்தர் பதாய் (64) உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சடலத்துடன் அவரது சகோதரர் ஹரீஷ் பதாயும் (58), வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுதீர் ராணா கூறும் போது, “நாங்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தனது சகோதரரை எழுப்ப வேண்டாம் என ஹரீஷ் பதாய் கூறினார். இவர் மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்துள்ளது. ஹரேந்தர் பதாயின் பிரேதப் பரிசோதனையில் அவர் பட்டினி காரணமாக சுமார் 60 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது” என்றார்.

மத்திய அரசில் உயர் அதிகாரி யாக இருந்த இவர்களது தந்தை, பணியிட மாற்றம் காரணமாக, தனது குடும்பத்தினருடன் பஞ்சாபிலிருந்து கடந்த 1980-ல் மீரட்டில் வந்து தங்கி உள்ளார். இவருக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் இருந்துள்ளனர்.

இதில், மூத்தவரான ஹரேந்தர், மீரட் மாவட்ட சர்தானா தாலுக் காவில் உள்ள ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையில் பணி யாற்றி கடந்த 2007-ல் ஓய்வு பெற் றுள்ளார். இளையவரான ஹரீஷ் இந்திய விமானப்படையின் உயர் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

பிரிட்டனில் பொறியாள ராகப் பணியாற்றி வந்த மற்றொரு சகோதரரும் சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டார். மற்றொரு சகோதரர், உடன் பிறந்தவர்களிடம் பழ காமல் லக்னோவில் தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படு கிறது. இவர்கள் அனைவருக்குமே மற்றவர்களுடன் பேசிப் பழகும் வழக்கம் இல்லை என்று சாஸ்திரி நகரவாசிகள் கூறுகின்றனர்.

மீரட் அருகே உள்ள ஜாகீர் விஹாரில் வசித்து வரும் அவரது சகோதரியிடமிருந்து விவாகரத்து பெற்ற கணவர் டாக்டர் எம்.டி.நாசியக்கை மிகுந்த சிரமப்பட்டு கண்டுபிடித்த போலீஸார், அவரை வைத்து ஹரேந்தரின் இறுதிச் சடங்குகளை முடித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணி யாற்றி வந்த அவர்களது சகோதரி விவாகரத்து பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தங்களது வீட்டில் சமையல் வேலை செய்தவர்களை நிறுத்தி உள்ளனர்.

பிறகு சகோதரியும் இறந்து விடவே, வெளியிலிருந்து உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். கடந்த மாதம் உணவு சப்ளை நிறுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்