கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு: தேவகவுடா, பேரன்கள் உள்பட 241 வேட்பாளர்கள் போட்டி

By பிடிஐ

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி நடக்கும் 3-ம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகாவில் இன்று நடக்கும் 14 தொகுதிகளில் தும்கூரில் மதச்சார்பற்றஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா, அவரின் பேரன்கள், பிரஜாவல் ரேவண்ணா ஹசன் தொகுதியிலும், நிகில் குமாரசாமி மாண்டியாவிலும்  போட்டியிடுகின்றனர்.

தவிர மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரீஷ், பெங்களூரு வடக்கு தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

இதுதவிர மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பெங்களூரு வடக்கு தொகியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி சிக்காபலபுரா தொகுதியிலும், கோலார் தொகுதியில் கே.எச். முனியப்பாவும் போட்டியிடுகின்றனர். இவை அனைத்தும் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 241 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 பேர் பெண் வேட்பாளர்கள். பெங்களூரு வடக்கு பகுதியில் இருந்து 31 வேட்பாளர்களும், ஹசன் தொகுதியில் 6 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் 2.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 30 ஆயிரத்து 164 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் தென் பகுதி, பழைய மைசூரு பகுதி, கடற்கரை மாவட்டங்கள் ஆகியபகுதிகளில் தேர்தல் நடக்கின்றன.

நண்பகலில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதால், வாக்காளர்கள் காலையில் இருந்தே வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் சுமுகமாக வாக்களிக்க 36 ஆயிரத்து 196 மின்னனு வாக்கு எந்திரங்கள், 37 ஆயிரத்து 705 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுகின்றன. 2 லட்சத்து 11 ஆயிரத்து 405 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்