தந்தை லாலுவை பார்க்கவிடாமல் பாஜக சதி: மகன் தேஜஸ்வி புகார்

By பிடிஐ

ராஷ்ட்டிரிய ஜனதா தளத் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் லாலுவைப் பார்க்க அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது:நான் நேற்று மாலை முதல் எனது தந்தையைப் பார்க்க அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன். ஆனால் ஜார்க்கண்டில் உள்ள பாஜக அரசு இதுவரை அனுமதி தரவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையுடன் அந்த அரசு நடந்து வருகிறது. சிறையில் இருக்கும் தந்தையைப் பார்க்க மகனுக்கு உரிமை உள்ளது. இதற்கு சிறை விதிகளிலும் இடம் உள்ளது. அவர் சிகிச்சை பெற்று வரும் அறையில் தினந்தோறும் சோதனை நடத்தப்படுகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அவருக்கு எக்கோகார்டியோகிராபி, எக்ஸ்-ரே சோதனைகளைச் செய்யுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதைச் செய்யவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

கல்வி

31 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

52 mins ago

தொழில்நுட்பம்

57 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்