72 மணிநேரம் அல்ல பிரதமர் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை விதியுங்கள்: அகிலேஷ் யாதவ் காட்டம்

By பிடிஐ

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்தை கண்டித்துள்ள சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'மோடியின் வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டுகள்' தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்ரீராம்பூரில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், " மக்களவைத் தேர்தல் முடியட்டும், மே.வங்கத்தில் தாமரை மலரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மம்தா குறைவான எம்.பி.க்களுடன் பிரதமர் கனவு காண்கிறார். மம்தாவுக்கு டெல்லி மிக தொலைவில் இருக்கிறது. தனது உறவுகளுக்கு பதவி கொடுத்து அலங்கரிக்கார் மம்தா" எனப் பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " வளர்ச்சிதான் நாங்கள் கேட்கிறோம். பிரதமரின் வெட்கக்கேடான பேச்சைக் கேட்டீர்களா. 125 கோடி மக்களின் நம்பிக்கையை இழந்தபின், அறத்துக்கு மாறான வகையில், சென்று 40 எம்எல்ஏக்கள் அளித்த உறுதியைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் கறுப்புப்பண மனநிலையைத் தான் பிரதிபலிக்கிறது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு  72 மணிநேரம் தடை செய்யக்கூடாது, 72 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரு மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை உண்டாக்கும் வகையில் பேசி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் அவருக்கு 72 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது. அதுபோல் அல்லாமல் மோடிக்கு 72 ஆண்டுகள் தடை கோரியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

53 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்