பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு நமோ உணவு பொட்டலம் வழங்கப்பட்டதால் சலசலப்பு

By பிடிஐ

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் தேர்தல் பணியில் இருந்த போலீஸாருக்கு 'நமோ புட்ஸ்' என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

நொய்டாவில் உள்ள கவுதம் புத்தா நகர் தொகுதியில் காலை 7 மணியில் இருந்து ஆர்வமாக மக்கள் வாக்களித்து வந்தனர். காலை 9 மணி அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அந்த உணவுப் பொட்டலங்கள் மீது 'நமோ புட்ஸ்' என்று எழுதப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த சிலர் பாஜக சார்பில் இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்குப்படுவதாக புகார் தெரிவித்து கூச்சலிட்டனர். அதன்பின் அங்கு அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த உணவுகள் 'நமோ புட்ஸ்' எனும் ஹோட்டலில் வாங்கப்பட்டவை, எந்த அரசியல் கட்சியினர் சார்பிலும் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இது குறித்து போலீஸ் எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், "அரசியல் கட்சி சார்பில் போலீஸாருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன. ஆனால், விசாரித்ததில் அது பொய்யான தகவல். உள்ளூரில் உள்ள நமோ ஹோட்டலில் இருந்து வாங்கப்பட்டவை. சிலர் அரசியல் நோக்கத்துடன் இதுபோன்ற புரளி பரப்புகிறார்கள். எந்தக் குறிப்பிட்ட கடையில் இருந்தும் உணவு வாங்கக்கூறி உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்