நம் அனைவருக்குமே தீங்கு...நாம் யாரும் 2019 தேர்தலில் அரசியல் சார்புகள் எடுக்க வேண்டாம்...  : பாதிரிமார்களுக்கு கேரள பிஷப் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கேரளாவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் பிஷப், பாதிரிமார்கள் யாரும் வரும் தேர்தலில் எந்த ஒரு அரசியல் சார்பு நிலைப்பாடு எடுக்க வேண்டாம் அது நம் அனைவருக்குமே திங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

 

பிஷப் மர் ஜான் நெல்லிகுன்னெல் இது குறித்து வெளியிட்ட சுற்றறிக்கையில், “நம் மக்களின் ஆன்மீகத் தலைவர்களாகிய நாம் எந்த ஒரு அரசியல் சார்பு நிலையும் எடுக்காமல் இருப்பது நல்லது, அப்படிப்பட்ட சார்பு நிலை நம் அனைவருக்குமே தீங்காக முடியும்.  தேர்தலில் யார் பக்கம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அறிவுத்திறன் நம் மக்களுக்கு இருக்கிறது

 

கடவுளுக்கு முன் நம் அனைவருக்கும் கடமை உள்ளது, அதாவது ஒற்றுமை திருப்பணி ஆகியவற்றின் குறியீடுகளாகச் செயல்படும் கடமை நமக்கு உள்ளது. ஆகவே தேர்தல் ரீதியான பிரச்சாரங்களிலிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்று முறையிடுகிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

2014 2014 லோக்சபா தேர்தலில் இதே பிஷப் சிபிஎம் ஆதரவு சுயேச்சை வேட்பாளரை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்