தடையை நீக்க முடியாது: தீவிரவாதி ஹபீஸ் சய்யீத் மனுவை நிராகரித்தது ஐ.நா.

By பிடிஐ

தம் மீதான தடையை நீக்கக்கோரி ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீத் தாக்கல் செய்த மனுவை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நிராகரித்துவிட்டது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில், இந்த தாக்குதலை ஜமாத்-உத்-தாவா என்ற தீவிரவாத அமைப்பு நடத்தியது கண்டறியப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சய்யீதை தடை செய்யக் கோரி ஐ.நா.வில் இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பேரில், அதே ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி, தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியலில் ஹபீஸ் சய்யீதின் பெயரை ஐ.நா. சேர்த்தது. இதனிடையே, தம் மீதானஇந்த தடையை நீக்கக் கோரி ஐ.நா.வில் ஹபீஸ் சய்யீத் கடந்த 2017-ல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து வந்த ஐ.நா. சபை, ஹபீஸ் சய்யீதின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், அவர் தொடர்ந்து தடை செய்யப்பட்ட தீவிரவாதி களின் பட்டியலில் நீடிப்பார் எனவும் தற்போது அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

விளையாட்டு

12 mins ago

கல்வி

59 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்