இத்தாலிய உணவுகளைப் பிரியத்துடன் சமைப்பேன்: மாணவர்களின் கேள்விகளுக்கு பிரியங்கா காந்தி பதில்

By ஐஏஎன்எஸ்

அயோத்தியில் பள்ளி மாணவர்களிடம் கலந்துரையடிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இத்தாலிய உணவுகளைச் சமைப்பது என்றால் கொள்ளைப் பிரியம் என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று (வெள்ளிக்கிழமை) சன்பீம் பப்ளிக் ஸ்கூலில் மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து 15 கி.மீ.தொலைவில் சாலை வழியாகவே சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

சன்பீம் பள்ளி ஆடிட்டோரியத்தில் குழுமியிருந்த மாணவ மாணவிகள் பல்வேறு கேள்விகளை பிரியங்கா காந்தியிடம் எழுப்பினர். அப்போது பிரியங்காவின் சொந்த வாழ்க்கை, விருப்பங்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்கூட அவர் வெளிப்படையாகப் பதிலளித்தார்.

ஒரு மாணவி, ''உங்களுக்கு சமையல் வருமா?'' என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.

இக்கேள்விக்காக மிகவும் மகிழ்ந்த பிரியங்கா, ''எனக்கு சமையலில் மிகவும் ஆர்வம் உண்டு. இத்தாலிய உணவுகளைச் சமைப்பது என்றால் கொள்ளைப் பிரியம், இந்திய, தாய்லாந்து உணவு வகைகளையும் சமைப்பேன்'' என்றார்.

இன்னொரு மாணவர் எழுந்து, ''சகோதரர் ராகுலைப் பற்றி சொல்லுங்கள். காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தும் எண்ணம் எதுவும் இருக்கிறதா?'' என்று கேட்டார். அப்போது கட்சி உள்விவகாரஙகள் சார்ந்த மவுனத்தை உடைத்தார்.

பிரியங்காக இதுகுறித்து பதிலளிக்கையில்,

''ராகுலின் கருத்துகள் மாறியுள்ளன. பல்வேறு பின்னணியைக் கொண்ட புதியவர்களைக் கட்சியில் இணைக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். ஆனால், கட்சியில் உள்ள பலரும் அஞ்சுகிறார்கள். கட்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதற்கு என்னுடைய ஆதரவை அவருக்கு அளித்துள்ளேன்'' என்றார்.

மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கப் போகும் 80 தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தலில் புத்துயிர் அளிப்பதற்கான பணியை பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

விளையாட்டு

24 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

47 mins ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

மேலும்