சாட்சியங்கள் இல்லாததால் கொடூர குற்றத்துக்கு தண்டனை விதிக்க முடியவில்லை: சம்ஜோதா வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கருத்து

By பிடிஐ

ஹரியாணா மாநிலம் பானிபட் அருகில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங், இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான் மற்றும் ராஜிந்தர் சவுத்ரி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டார். தீர்ப்பின் முழு விவரம் நேற்று வெளியானது.

இந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது: நம்பகத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் இல்லாததால் வன்முறையின் ஒரு கொடூரமான செயலுக்கு தண்டனை விதிக்கமுடியவில்லை என்ற வலியுடன் இந்தத் தீர்ப்பை எழுதுகிறேன். இந்த வழக்கில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கான ஆதாரத்தை அரசு தரப்பு சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை. நீதிமன்றமானது வழக்கு தொடர்பான சாட்சியங்களை மதிப்பிட்டு, அலசி ஆராய்ந்து, சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கவேண்டும்.

இந்த வழக்கில் சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படாமலும், கண்டுபிடிக்கப்படாமலும் போய்விட்டனர்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்