ஏ-சேட் மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு திட்டம்: காங்கிரஸ் எம்.பி. புகழாரம்

By செய்திப்பிரிவு

இந்திய செயற்கைக்கோள்களை அழிக்கும் முயற்சியைத் தடுக்க ஏசாட் - ஆண்ட்டி சாட்டிலைட்டை ஏவி விண்வெளியில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசி முடித்த சில நொடிகளிலேயே இது காங்கிரஸின் திட்டம் எனக் கூறி ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதியான அகமது படேல், ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், செயற்கைக்கோள்களை விண்ணிலேயே வீழ்த்தும் ஆண்ட்டி சாட்டிலைட் ( ASAT ) திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே தொடங்கி வைத்தது. அதன் பலன் இப்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. நமது விண்வெளி விஞ்ஞானிகளை வாழ்த்தும் அதே வேளையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைப் பண்புக்கும் வாழ்த்து கூறுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தொலைக்காட்சியில் நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய செயற்கைக்கோள்களை அழிக்க முயலும் செயற்கைக்கோள்களை விண்வெளியிலேயே தடுத்து முறியடிக்கும் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாகக் கூறினார். மிஷன் சக்தி என பெயரிடப்பட்ட அந்த ஆபரேஷன் மூன்று நிமிடங்களில் வெற்றிகரமாக முடிவுற்றதாகவும். இதனால், நாட்டின் பாதுகாப்புக்கு பலம் சேர்ந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்திய அரசுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்