மோடி வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு ஆபத்து- ஹேமமாலினி எச்சரிக்கை

By பிடிஐ

நாட்டுக்கு எது சரியோ அதை செய்யும் துணிச்சல் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் நாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்று நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் மதுராதொகுதி பாஜக எம்.பி.யான ஹேமமாலினி, வரும் மக்களவைத் தேர்தலில் இங்கு மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஊழல் இல்லாத ஆட்சியை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. பிரதமர் பதவிக்கு மோடியை விட்டால் வேறு ஆள் இல்லை. அவர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும். வேறு யார் வந்தாலும் அது நாட்டுக்கு ஆபத்தாக முடியும். அதனால்தான் மோடியை மீண்டும் பதவியில் அமர்த்த நாங்கள் பாடுபடுகிறோம். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதில் மோடி அரசுக்கு இருந்த துணிச்சல் முந்தைய அரசுகளுக்கு இருந்ததில்லை.

பிரதமர் எதைச் செய்தாலும் எதிர்க்கட்சிகள் அதை கிண்டல் செய்வது வருத்தம் அளிக்கிறது. நாட்டுக்கு எது சரியோ அதைத்தான் பிரதமர் மோடி சிந்திக்கிறார். அதை துணிச்சலுடன் செயல்படுத்துகிறார்.

பிரதமர் மோடி நம் நாட்டின் பாதுகாவலராகத் திகழ்கிறார். நான் பாலிவுட் நட்சத்திரம் என்பதால் மட்டுமே மக்கள் எனக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். மோடி எங்கள் தலைவர் என்பதால் மக்கள் எனக்கு வாக்கு அளிப்பார்கள்.

இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

7 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்