மக்களவைத் தேர்தல் 2019: ஜெயப்பிரதா, மேனகா காந்தி, வருண் காந்தி போட்டி - உ.பி. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

 

காலையில் பாரதிய ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேனகா காந்திக்கும், வருண் காந்திக்கும் தொகுதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. வருண் காந்திக்கு பிலிபித் தொகுதியும், மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு சென்ற ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு அலகாபாத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

 

மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா காஸிபூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2014-ல் அவர் இங்குதான் வென்றார். உ.பி. அரசின் அமைச்சர் சத்யதேவ் மதிப்பு மிக்க கான்பூர் தொகுதியில் நிற்கிறார்.

 

எல்.கே.அத்வானி, பி.சி.கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா ஆகிய மூத்த தலைவர்களுக்கு பாஜக தொகுதி ஒதுக்கவில்லை.  உ.பி. பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே கடந்த முறை போட்டியிட்ட சண்டவ்லியில் இம்முறை போட்டியிடுகிறார்.

 

மேற்கு வங்கத்திற்கான 10 தொகுதி வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்