ராஜிவ் காந்தி படுகொலையையும் விபத்து என்பீர்களா?- காங்கிரஸுக்கு பாஜக பதிலடி

By செய்திப்பிரிவு

 

 

ராஜிவ் காந்தி படுகொலையையும் விபத்து என்பீர்களா என்று புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

 

பாலகோட் தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கையில் குழப்பம் நீடித்து வருவதாகவும் புல்வாமா தாக்குதலை விபத்து என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், ''புல்வாமா தாக்குதலை விபத்து என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். மிகுந்த மரியாதையுடன் அவரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். ராஜிவ் காந்தியின் படுகொலையை விபத்து என்பீர்களா அல்ல்லது தீவிரவாதிகளின் தாக்குதல் என்பீர்களா?

 

பாலகோட் விமானத் தாக்குதல் ஒரேயோரு இடத்தில் மட்டுமே நடைபெற்றது. வேறெங்கும் இல்லை. தாக்குதல் நடைபெறும் இடம் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், தாக்குதல் நடத்தப்பட்டது. 

 

தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்துக் கேட்கிறீர்கள். அங்கிருந்த கட்டிடங்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கையையும் அங்கு வசித்தவர்களின் எண்ணிக்கையையும் தோராயமாக மதிப்பிட்டோம். அதைத்தான் அமித் ஷா, 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். இது உத்தேசமான தகவலே தவிர உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல'' என்றார் வி.கே.சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்