சிஆர்பிஎப் வீரர்களின் தியாகத்தை அப்பட்டமாக அரசியலாக்கும் பாஜக அரசு: 21 எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு

By பிடிஐ

சிஆர்பிஎப் துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை பாஜகவினர் அப்பட்டமாக அரசியலாக்குகின்றனர் என்று காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கட்சிகளின் கூட்டம் நேற்று டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. 21 எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் டேஷ் அலி, திமுக எம்.பி. திருச்சி சிவா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆனால் சமாஜ்வாதி கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆலோசனைக்குப் பிறகு 21 கட்சிகளின் கூட்டு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாசித்தார்.

அவர் கூறும்போது, “புல்வாமாவில் நடந்த தாக்குதலை வைத்து அப்பட்டமான அரசியல் செய்யும் பாஜகவினரை இந்தக் கூட்டணி கடுமையாகக் கண்டிக்கிறது. சிஆர்பிஎப் வீரர்களின் தியாகத்தின் மீது பாஜக அரசியல் செய்கிறது.

இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பிரதமர்ஆலோசனை நடத்தியிருக்கவேண்டும். நமது ஜனநாயக நாட்டில் அதுதான் இதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. ஆனால் பாஜக அரசு அதைச் செய்யவில்லை. நாட்டின் பாதுகாப்பிலேயே அரசியல் செய்கிறது பாஜக.

இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் மாயமான விவகாரம் கவலைக்குரியது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்