பாலாகோட் தாக்குலை முடித்து பாதுகாப்பாகத் திரும்பிய விமானிகள்: முன்னாள் ராணுவ தளபதி பெருமிதம்

By செய்திப்பிரிவு

பாலாகோட் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானிகளும் பாதுகாப்பாகத் திரும்பியதாக முன்னாள் ராணுவத் தளபதி  டிஎஸ் ஹூடா தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை)  தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.

இதுதொடர்பாகப் பேசிய, ஓய்வுபெற்ற வடக்கு ராணுவத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனெரல் டிஎஸ் ஹூடா, ''தொழில்முறையாக சீரிய வகையில் முழுமையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எடுத்ததற்கு அரசுக்கு என்னுடைய பாராட்டுகள். சிறப்பாக அதே நேரத்தில் துல்லியமாகத் தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படைக்கு வாழ்த்துகள்.

தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானிகளும் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். இதுதான் தாக்குதலில் முக்கியம் என்று நினைக்கிறேன். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று மனப்பூர்வமாக நம்பினேன்'' என்றார்.

அதேபோல முன்னாள் ராணுவத் தலைவர் விக்ரம் சிங் கூறும்போது, ''மிகச்சிறப்பான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரதமர் இதுகுறித்து அறிவித்திருந்தார். யூரி தாக்குதலுக்குப் பதிலடியாக துல்லியத் தாக்குதலை நடத்தினோம். இது இரண்டாவது துல்லியத் தாக்குதல்'' என்றார் விக்ரம் சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்