சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் மீது அட்டர்னி ஜெனரல் அவதூறு வழக்கு

By பிடிஐ

சிபிஐ இடைக்கால இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து ட்வீட்கள் பதிவு செய்ததற்காக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

பிப்ரவரி 1ம் தேதி பிரசாந்த் பூஷண் பதிவிட்ட ட்வீட்டில்,  உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது என்றும் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு கூட்டத்தைப் பற்றிய நிகழ்வொழுங்கின் இட்டுக்கட்டப்பட்ட வடிவத்தை சமர்ப்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இதனையடுத்து அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிப்.1ம் தேதி  உச்ச நீதிமன்ற விசாரணையின் முன்பு பிரதமர் தலைமையிலான சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தின் மினிட்ஸை நீதிமன்றத்தில் தான் சமர்ப்பித்து, எனவே  அட்டர்னி ஜெனரலின் நேர்மைக்கும் மாண்புக்கும் களங்கம் விளைவிக்கும் கருத்துகளை பிரசாந்த் பூஷண் வெளியிட்டுள்ளார் என்றும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

கமிட்டியின் பரிந்துரையின் பேரில்தான் நாகேஸ்வர ராவ் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்று கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

28 mins ago

தொழில்நுட்பம்

32 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்