சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

By பிடிஐ

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப் பட்டதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மாவை பிரத மர் மோடி தலைமையிலான உயர் நிலைக் குழு கடந்த ஜனவரி 10-ம் தேதி நீக்கியது. மேலும் சிபிஐ கூடுதல் இயக்குநர் எம்.நாகேஸ் வர ராவை இடைக்கால இயக்கு நராக மீண்டும் நியமித்தது.

இந்த நியமனத்துக்கு எதிராக ‘காமன் காஸ்' என்ற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு கடந்த பிப்ரவரி 1 ம் தேதி விசார ணைக்கு வந்தபோது, இடைக்கால இயக்குநர் நியமனத்தால் தாங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் முழுநேர இயக்குநரை மத்திய அரசு உடனே நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ம.பி. முன்னாள் டிஜிபி ரிஷிகுமார் சுக்லா, சிபிஐ புதிய இயக்குநராக நியமிக்கப் பட்டார். இந்நிலையில் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “சிபிஐ-க்கு முழு நேர இயக்குநர் நியமிக்கப்பட்டு விட்டதால் இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என கருகிறோம்” என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

34 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

39 mins ago

ஓடிடி களம்

57 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்