மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்; தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் மனு

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலின்போது, 50 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரங் களில் பதிவாகும் வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத் திடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தில் மோசடி செய்ய வாய்ப் புள்ளது. எனவே வரும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று ஆணை யம் தெரிவித்துவிட்டது.

இந்தப் பின்னணியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ், தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் மூத்த தலைவர்கள் டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த னர்.

அதில், மக்களவைத் தேர்தலின் போது, 50 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவா கும் வாக்குகளை விவிபாட் இயந்திரங்களில் பதிவாகும் வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப் பிட்டுப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர் ஓட்டு போட்டதும் வாக்களித்த வேட்பாளரின் சின்னம், வரிசை எண் ஆகியவற்றை 7 விநாடிகள் வரை பார்க்க முடியும்.

தற்போது ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அடிப்படையில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளும் விவிபாட் இயந்திரங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. இந்த ஒப்பீட்டுப் பணியை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், ஆனந்த் சர்மா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாடு கட்சி மூத்த தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் தேர்தல் ஆணையத்துக்கு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்