கன்னட முன்னணி நடிகர்கள், வீடுகளில் வருமான சோதனை

By இரா.வினோத்

கடந்த ஆண்டு கன்னட திரை யுலகில் நடிகர்கள் சிவராஜ் குமார், சுதீப் நடித்த‌ ' தி வில்லன்', யஷ் நடித்த 'கே.ஜி.எஃப்' ஆகிய மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகின. அதிக பொருட்செலவில் தயாரிக் கப்பட்ட இந்த படங்கள் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த தாக கூறப்பட்டது.

இந்த திரைப்படங்களில் தொடர் புடைய நடிகர்களும், தயாரிப் பாளர்களும் வரி ஏய்ப்பில் ஈடுபட் டுள்ளதாக வருமான வரித் துறைக்கு புகார் வந்தது.

அதன்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 6.30 மணிக்கு நடிகர்கள் சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார், சுதீப், யஷ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இதேபோல், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர். மனோகர், விஜய் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், இவர்களுக்கு நெருக்க மானவர்களின் வீடு, அலு வலகங்கள் உட்பட 25 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, சிவராஜ் குமாரின் வீட்டில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத் துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதே போல, சுதீப்பின் வீட்டில் வீட்டு பத்திரங்கள், தொழில் முதலீடுகள் தொடர்பான ஆவணங் கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யஷின் கத்தரிகுப்பே வீட்டில் ஏராள மான தங்க வைர நகை களையும், சொத்துகளின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

ராக்லைன் வெங்கடேஷ், சி.ஆர். மனோகர், விஜய் ஆகி யோரின் வீடு மற்றும் அலுவல கங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

பெங்களூருவில் 25 இடங் களில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் 300-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

16 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

20 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்