தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு: ஆணவக் கொலை காரணமா?

By செய்திப்பிரிவு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுமியின் உடல் பிஹார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கயா மாவட்டத்தின் மான்பூர் பகுதியில் ஜனவரி 6-ம் தேதி 16 வயது சிறுமியின்  உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் ஆசிட் வீசப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காணாமல் போன சிறுமி குறித்து, அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜன. 4-ம் தேதி அவர் அளித்த புகாரில் மகளை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனவரி 6-ம் தேதி சிதைந்த நிலையில் சிறுமியின் உடல் அவரின் வீட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டது. சில மீட்டர்கள் தூரத்தில் தலை பின்னர் கிடைத்தது.

மெழுகுவர்த்தி பேரணி

இதையறிந்த உள்ளூர் மக்கள், ஜனவரி 9-ம் தேதி காவல்துறைக்கு எதிராக கயாவில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அவர்கள் வலியுறுத்தினர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தான் மகள் கொல்லப்பட்டதாகச் சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவல்துறையின் விசாரணையில், கொல்லப்பட்ட சிறுமியுடைய தந்தையின் நண்பர் லீலா பட்வாவைக் கைது செய்துள்ளனர். டிசம்பர் 31-ம் தேதி சிறுமியுடன் பட்வாவைப் பார்த்ததாக விசாரணையில் சிலர் கூறியிருந்தனர். அவரின் மொபைல் போனைச் சோதித்தபோது, உள்ளூர்க் குற்றவாளிகளுடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆணவக் கொலையா?

இதுகுறித்துப் பேசிய கயா எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா, ''இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சிறுமி தன் நண்பருடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். அதனால் கோபம் கொண்ட குடும்பத்தினர் அவரைக் கொலை செய்திருக்கலாம். ஆரம்பத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கட்டத்தில் விசாரணை நடத்தினோம்.

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். ஆணவக் கொலை என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

25 mins ago

வணிகம்

44 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்