அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம்? புகழேந்தியிடம் நாளை விசாரணை

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அதிகாரிகளுக்கு கோடிக்கணக் கில் லஞ்சம் கொடுத்து, சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக சிறைத்துறை டிஐஜி யாக இருந்த ரூபா அறிக்கை அளித்தார்.

இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் குழு கடந்த ஆண்டு அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கையில், ‘‘சிறையில் சசிகலா சிறப்பு சலுகை அனுபவித் தது உண்மைதான். தகவல் களை நேரில் விசாரித்து உறுதிப் படுத்தினோம். சசிகலா சிறை அதிகாரிகளுக்கு தனக்கு வேண்டப் பட்டவர்கள் மூலம் வெளியில் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தை கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண் டும்''என தெரிவிக்கப்பட்டு இருந் தது.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் அமமுகவின் கர்நாடக செயலாளர் புகழேந்திக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானதை தொடர்ந்து செவ் வாய்க்கிழமை புகழேந்தியிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து நாளை (வியாழக் கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி புகழேந்தியிடம் பெங்களூரு மாநகர துணை கண்காணிப்பாளர் திம்மையா தெரிவித்தார்.

3 பேருக்கு நோட்டீஸ்

சசிகலாவை சிறையில் சந்தித்த இரு வழக்கறிஞர்கள், சின்ன சேலத்தை சேர்ந்த ஆனந்த் ஆகிய 3 பேரும் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ள தாக தெரிகிறது. இதுபோல முன்னாள் டிஜிபி சத்தியநாரா யண ராவ், சிறை கண்காணிப் பாளர் கிருஷ்ண குமார், துணை கண்காணிப்பாளர் அனிதா உள் ளிட்டோரிடமும் விசாரிக்கப் படவுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

ஓடிடி களம்

42 mins ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

58 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்