அடுத்த ராஜினாமா: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து பொருளாதார வல்லுநர் திடீர் விலகல்

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து ராஜினாமா செய்வதாக, மிகச்சிறந்த பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான சுர்ஜித் பல்லா இன்று திடீரென அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான நிதிஆயோக் அமைப்பில் விவேக் தேப்ராய், பொருளாதார நிபுணர்கள் ரத்தின் ராய், ஆஷிமா கோயல், ஷமிகா ரவி, சுர்ஜித் பல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், எந்த விதமான காரணத்தையும் கூறாமல் திடீரென பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இருந்து ராஜினாமா செய்வதாக சுர்ஜித் பல்லா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இது குறித்து சுர்ஜித் பல்லா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “ பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து நான் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் நேற்று திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவரின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் குழுவில் இருந்த முக்கிய உறுப்பினர், பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

35 mins ago

க்ரைம்

39 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

49 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்