சம்பள பாக்கி கேட்டு 7 இந்திய ஊழியர்களை சிறைபிடித்த எத்தியோப்பியர்கள்

By செய்திப்பிரிவு

எத்தியோப்பியாவில் சம்பள பாக்கி கேட்டு இந்திய நிறுவனத்தின் 7 ஊழியர்களை உள்ளூர் தொழிலா ளர்கள் சிறைபிடித்துள்ளனர்.

இந்தியாவின் ‘ஐஎல் & எப்எஸ்’ என்ற நிறுவனம் 2 ஸ்பெ யின் நிறுவனத்துடன் சேர்ந்து எத்தியோப்பியாவில் சாலை ஒப்பந்தப் பணிகளை மேற் கொண்டது.

இந்நிலையில் ‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனம் கடன் சுமையில் சிக்கியதால் இந்தப் பணிகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளூர் தொழிலாளர் களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பள பாக்கி கேட்டு ‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவ னத்தின் இந்திய ஊழியர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலா ளர்கள் 3 இடங்களில் சிறை பிடித்து வைத்துள்ளனர்.

இவர் களுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஆதர வாக உள்ளதாக சிறைபிடிக்கப் பட்ட இந்திய ஊழியர்கள் அனுப்பியுள்ள இமெயில் கடிதம் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் எத்தியோப் பியா தலைநகர் அடிஸ் அபாபா வில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த விவகாரத்தில் எத்தியோப் பிய அதிகாரிகள் மற்றும் ‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

பிரச்சினைக்கு தீர்வு காண முயன்று வருகிறோம்” என்றார். “‘ஐஎல் & எப்எஸ்’ நிறுவனம் 1,260 கோடி டாலர் கடன் தொகையை நிலுவையில் வைத் துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளால் எத்தியோப்பியாவுக்கு பணம் அனுப்ப முடியவில்லை என அந்த நிறுவனம் கூறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 secs ago

தொழில்நுட்பம்

5 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்