கர்நாடக சட்டப்பேரவையில் இளம்பெண்களின் புகைப்படங்களை போனில் பார்த்த எம்எல்ஏ

By செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பெண்களின் புகைப்படங்களை போனில் பார்த்துக் கொண்டிருந்த எம்எல்ஏ மகேஷின் செயல், கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்துப் பேசிய மகேஷ், தனது மகனுக்குப் பெண் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வளாகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றபோது, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ மகேஷ் தனது போனில் இளம்பெண்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எம்எல்ஏ மகேஷ், தனது மகனுக்குத் தகுந்த பெண்ணைத் தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதுபற்றிப் பேசிய அவர், ''ஆம் நான் போனை எடுத்துச் சென்றேன், அது தவறுதான். மீண்டும் அதைச் செய்யமாட்டேன். ஆனால் அதற்காக செய்தியாளர்கள் இப்படி அவதூறு பரப்பாதீர்கள். என்னுடைய மகனுக்கு என் நண்பர் ஒருவர் இளம்பெண்ணின் புகைப்படத்தை அனுப்பினார். அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக என்று கூறி, தனது அமைச்சர் பதவியை மகேஷ் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

தமிழகம்

25 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்