தீவிரவாதிகள் சுட்டதில் காஷ்மீரில் 4 போலீஸார் பலி: ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்பு

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் 4 போலீஸார் பலியாயினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்தது.

இதுகுறித்து காஷ்மீரைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சோபியான் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினரான  காஷ்மீரி பண்டிட் குடும்பத்தாருக்கு பாதுகாப்புக்காக காஷ்மீர் போலீஸார் 4 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்தப் பகுதியில் 6 காஷ்மீரி பண்டிட் குடும்பத்தார் மட்டுமே வசித்து வந்தனர்.

அவர்களின் பாதுகாப்புக்காக 4 போலீஸார் கூடாரத்தில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள், போலீஸாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் 3 போலீஸார் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். அவர் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

அப்துல் மஜீத், அனீஸ் அகமது, ஹமிதுல்லா, மெஹ்ராஜ் உத் தின் ஆகிய 4 பேர் இறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத படைக்கு முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி அடில் பஷிர் தலைமை தாங்கியது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த அக்டோபரில் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏவிடமிருந்து 8 ஆயுதங்களைப் பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் தப்பியோடும்போது போலீஸாரிடமிருந்த 3 துப்பாக்கிகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

அவர்களைப் பிடிக்கும் பணியை ராணுவ வீரர்கள் தொடங்கியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்