தெலங்கானா மாநில முதல்வராக தொடர்ந்து 2-வது முறை இன்று பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக இன்று பதவி ஏற்கிறார் டிஆர்எஸ் கட்சியின் தலைவரான கே. சந்திரசேகர ராவ். ஹைதராபாத்தில் ராஜ்பவனில் பதவியேற்பு விழா மிக எளிமையான முறையில் நடைபெற உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் முன் கூட்டியே தனது ஆட்சியை கலைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் முடிவை மேற்கொண்டவர் சந்திரசேகர ராவ். இதனை தொடர்ந்து, இங்குள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 88 தொகுதிகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் டிஆர்எஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தது. பாஜகவும் தனித்து போட்டியிட்டு, கே. சந்திரசேகர ராவ் அரசை தீவிரமாக விமர்சித்தது. இரு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள், இதன் தலைவர்கள் சந்திரசேகர ராவை தீவிரமாக விமர்சித்தும், மாபெரும் வெற்றி பெற்றார் சந்திரசேகர ராவ். இதனை தொடர்ந்து நேற்று, ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில், டிஆர் எஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும், கே. சந்திரசேகர ராவை கட்சியின் சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்தனர். இதனை தொடர்ந்து, நேற்று மாலை, சந்திரசேகர ராவ் மற்றும் இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ராஜ்பவன் சென்று, ஆளுநர் நரசிம்மனை சந்தித்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தங்களது கட்சியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் ஆளுநரிடம் சந்திரசேகர ராவ் வழங்கினார். பின்னர், ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து, இன்று மதியம் 1.30 மணிக்கு கே. சந்திரசேகர ராவ் ராஜ்பவனில் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழா எளிமையாக நடக்க உள்ளது. சந்திரசேகர ராவுடன் ஓரிரு அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. இன்னமும் 5 அல்லது 6 நாட்களுக்குள், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக தெலங்கானா பவனில் நேற்று சந்திரசேகர ராவ் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்