சாலை பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை

By செய்திப்பிரிவு

சாலை பாதுகாப்பு, சாலை பள்ளங்களால் உயிரிழந்தோர் எண் ணிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழு வின் தலைவராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதா கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இக்குழுவினர் சாலை பள்ளங் களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தனது பரிந்துரைகளை உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோக்குர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

சாலைகளில் உள்ள பள்ளங் களால் ஏற்பட்ட விபத்துகளில் கடந்த 2013 முதல் 2017 வரை 14,926 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை ஏற்றுக் கொள் ளவே முடியாது. எல்லைகளில் உயிரிழப்போர் அல்லது தீவிர வாதிகளால் உயிரிழப்போர் எண் ணிக்கையை விட, சாலை பள்ளங் களால் உயிரிழப்போரின் எண் ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இது சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாலைகளைச் சரியாக பராமரிப்பதில்லை என்ப தையே காட்டுகிறது. சாலை பள்ளங் களால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தோர், நஷ்டஈடு பெறுவ தற்கு உரிமை உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதி பதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்