ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

By ஐஏஎன்எஸ்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிமூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிமூ கிராமத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.

ஒவ்வொரு வீடாகப் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

 

இதில் 3 தீவிரவாதிகள் என்கவுண்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் 5 பேர் குண்டுக்காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரையும் போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் இறந்துவிட்டனர். மேலும், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீவிரவாதிகள் இன்னும் பதுங்கி இருக்கலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புல்வாமா மாவட்டத்தில் இன்டர்நெட் சேவையையும், காஷ்மீர், பனிஹால் இடையே ரயில்சேவையும் பாதுகாப்பு படையினர் ரத்து செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்