மீண்டும் தீவிரமாகும் 3 அணி: நவீன், மம்தாவுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

By செய்திப்பிரிவு

பாஜக மற்றும் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் சந்தித்து பேசியுள்ளார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வலிமையான எதிர் அணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த அணியில் இடதுசாரிகள், மாநில கட்சிகளின் தலைவர்களை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும், பாஜக மற்றும் காங்கிரஸை ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியை தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.

சந்திரசேகர் ராவ் கருத்தை, மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி போன்றவர்களை சந்தித்து பேசினார்.

இதனிடையே தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் அவர் சில மாதங்களாக உள்ளூர் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். அங்கு தேர்தல் முடிந்து மீண்டும் முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார்.

இதையடுத்து மக்களவை தேர்தலில் அவர் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். மேலும் மூன்றாவது அணி என்ற கோஷத்தை மீண்டும் முன் வைத்துள்ளார். இதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர் நேற்று சந்தித்து பேசினார்.  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார்.

இதுகுறித்து சந்திரசேகர் ராவ் கூறுகையில் ‘‘பாஜக- காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். இதற்காக தொடர்ந்து முயன்று வருகிறேன். இதுதொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறேன். விரைவில் எங்கள் எண்ணம் செயலாக உருவெடுக்கும்’’ எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் செல்லும் அவர் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்