வறட்சி அபாயத்தில் மகாராஷ்டிரம்: குடிநீருக்கு அலையும் மக்கள்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்திருப்பதால் அம்மாநில விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு செப்டம்பர் 30-ம் தேதியுடன் பருவமழை அதிகாரபூர்வமாக முடிவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுடன், குடிநீர்ப் பற்றாக்குறையும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களின் எல்லை அருகே உள்ள மராட்வாடா பிராந்தியத்தில் வறட்சிக்கான அறிகுறிகள் அக்டோபரிலேயே தொடங்கிவிட்டன. ஔரங்காபாத், பீடு உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மோசமாகியிருக்கிறது. 1,000 லிட்டர் நீர் ரூ.300-க்கு விற்கப்படுவது கிராமத்து மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குடிநீருக்காகப் பல கிலோமீட்டர் தொலைவு அலைய வேண்டிய சூழல், அப்பகுதி கிராமத்தினருக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று மக்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்