சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை

By செய்திப்பிரிவு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண் களும் சபரிமலை ஐயப்பன் கோயி லுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் 48-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 23-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.

அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு மறுஆய்வு மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றன.

அனைத்து கட்சி கூட்டம்

மண்டல- மகர விளக்கு சீசனை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 17-ம் தேதி முதல் வழக்கமான பூஜை கள் நடைபெறும். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.

கடந்த ஐப்பசி மாத பூஜையின் போது பெண்களைத் தடுத்ததாக 543 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,701 பேர் கைது செய்யப்பட்ட னர். மண்டல- மகர விளக்கு சீசனின்போது மீண்டும் பிரச்சினை எழக்கூடும் என்பதால் அனைத்து தரப்பிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஆளும் மார்க்சிஸ்ட் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந் திரன் கூறியபோது, "கருத்தொற்று மையை ஏற்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த ஆலோ சித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

37 mins ago

சுற்றுலா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்