நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டாருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு

By செய்திப்பிரிவு

இணையத்தில் குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்தக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் ஒன்றால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு நவம்பர் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

‘நீதிக்கான உரிமைகள் அறக்கட்டளை’ என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

‘’இணையத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் வெளியாகும் நிகழ்ச்சிகள் அசிங்கமாக, ஆபாசமாக மற்றும் பாலியலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. நெறிமுறை அற்ற வகையில் உள்ள பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்களைத் தவறான முறையில் சித்தரிக்கின்றனர்.

இதனால் இணையத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதை செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் நீதித்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் சட்டப்படி தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை/ உள்ளடக்கங்களை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்’’.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

கல்வி

19 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

47 mins ago

வாழ்வியல்

56 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்