பிரதமர் மோடியின் வேண்டுகோள்: நிராகரித்தது சவுதி அரேபியா

By செய்திப்பிரிவு

கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவுவது, ரூபாயில் பரிவர்த்தனை செய்வது உள்ளிட்ட பிரதமர் மோடி வைத்த வேண்டுகோளை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிராகித்துவிட்டன.

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் நிதிப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது.

ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப் படுத்த சில இறக்குமதி கட்டுப்பாடு களை அரசு விதித்த போதிலும் அது பெரிய அளவில் பலன் தரவில்லை. இந்நிலையில் நேற்று நடை பெற்ற சர்வதேச எண்ணெய் உற் பத்தி செய்யும் நிறுவன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்வதில் டாலர் மட்டுமே அளிக்க வேண்டுமா, அதற்குப் பதில் ரூபாய் கரன்சியை எந்தெந்த நிறுவனங்கள் ஏற்கும் வாய்ப்புள்ளது என்பதை ஆராய வேண்டும். கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும். எண்ணெய், எரிவாயு அகழ்வில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வராதது ஏன். இதுபோன்ற நிறுவனங்களை ஈர்ப்பதற்காக தேவையான கொள்கை மாற்றங்களை செய்த போதிலும் அவை வராததற்கான காரணங்களை ஆராய வேண்டும். கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் விஷயத்தில் ஏற்றுமதி நாடுகள் தீர்வை ஏற்படுத்த வேண்டும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக அளவில் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது’’ என பிரதமர் மோடி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அப்போது சவுதி அமைச்சர் காலித் கூறுகையில் ‘‘கச்சா எண்ணெய் சப்ளை மட்டுமே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு தேவையான உதவிகளை இந்தியாவுக்கு செய்ய தயாராக உள்ளோம். ஆனால் விலை குறைப்பு என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு எங்களால் உதவ முடியாது’’ எனக் கூறினார்.

ரூபாய் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் அது ரூபாய் மதிப்பு சரிவை ஓரளவு ஈடுகட்டுவதோடு நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பை ஓரளவு சமாளிக்க உதவும். இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம் இறக்கு மதி மூலமே பூர்த்தி செய்யப் படுகிறது. இதனால் கச்சா எண் ணெய் இறக்குமதிக்கு இந்தியா மிக அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

உலகம்

6 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

21 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்