‘மக்களுக்குத் தேவை வீடு தேடி வரும் மதுபாட்டில் அல்ல, உதவி’: மகாராஷ்டிரா அரசு மீது உத்தவ் தாக்கரே தாக்கு

By பிடிஐ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வீடு தேடி மதுபாட்டில்கள் வரத் தேவையில்லை அவற்றை மக்கள் கேட்கவும் இல்லை, மாறாக, அவர்கள் வீடு தேடி வரும் உதவியைத் தான் விரும்புகிறார்கள் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கே மதுவகைகளை ஹோம் டெலிவரி செய்ய மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசின் கலால்வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே அளித்த பேட்டியில், ஆன்-லைனில் மதுவிற்பனையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே மதுவகைகள் டெலிவரி செய்யப்படும். இந்தத் திட்டமாக இருக்கிறது, இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துத்தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் , வீட்டுக்கே மதுவகைகளை அளிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிரா மக்களுக்கு வீடுதேடி மதுவகைகள் கொடுக்கத்தேவையி்ல்லை. மக்கள் பற்றாக்குறை மழையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அவருக்கு உதவிதேவை. அவர்களுக்கு வீடு தேடி உதவிதான் தேவையைத் தவிர மதுபாட்டில்கள் தேவையில்லை.

ஆன்-லைனில் மதுவகைகளை ஆர்டர் செய்து குடிப்பது இந்த மாநிலத்தின் பாரம்பரியம் அல்ல. ஒவ்வொரு நாளும் மாநில அரசு செய்யும் செயல்களும், அறிவிக்கும் திட்டங்களும், மாநிலத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.

மராத்வாடா மண்டலத்தில் வசிக்கும் மக்கள் பற்றாக்குறை மழையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மத்திய அரசின் உதவியைப் பெறுவதற்காக, வரிசையில் நின்று காத்துக்கிடந்து பெறும் அவலத்தை ஏற்படுத்திவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

55 mins ago

ஜோதிடம்

30 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்