பிறந்த நாள் கொண்டாடிய சிறுமிக்கு மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

பிறந்த நாள் ‘கேக்’கில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற விரும்பிய சிறுமி பெலக்குவுக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பெலக்குவின் தந்தை மகேஷ் விக்ரம் ஹெக்டே, பிறந்த நாள் கேக் ஒன்றின் படத்துடன் ட்விட்ட ரில் வெளியிட்ட செய்தி, சமூக வலைதளங்களில் பரவியது. இது பிரதமரின் கவனத்தை பெற்றது.

பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ள அந்த கேக்குடன் மகேஷ் விக்ரம் வெளியிட்ட செய்தியில், “இன்று எனது மகள் பெலக்குவுக்கு பிறந்த நாள். உனது பிறந்த நாளில் உனக்கு என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்டேன். எனது பிறந்த நாள் கேக்கில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் என அவள் கூறினார். பிரதமர் மோடி திருடன்தான். அவர் குழந்தைகளின் இதயங்களை திருடி விட்டார்” என்று கூறியிருந் தார்.

இதற்கு பிரதமர் அனுப்பிய பதிலில், “பெலக்குவுக்கு எனது ஆசிர்வாதங்களை தெரிவியுங்கள். அவள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ கடவுளை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

பெலக்கு என்பது கன்னடச் சொல்லாகும். விளக்கு என்பதே இதன் பொருளாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

8 mins ago

சுற்றுலா

30 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

43 mins ago

உலகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்