வரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா (86), உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை தனது இல்லத்தில் காலமானார். 1928-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கங்கரா மாவட்டத்தில் பிறந்த பிபின் சந்திரா ஃபோர்மன் கிறித்தவக் கல்லூரி, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தார்.

டெல்லி இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக உயர்ந்தார்.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் ‘தி ரைஸ் அண்ட் குரோத் ஆஃப் எகனாமிக் நேஷனலிஸம்', ‘இன் தி நேம் ஆஃப் டெமாக்ரஸி', ‘நேஷனலிஸம் அண்ட் கலோனி யலிஸம் இன் மாடர்ன் இந்தியா' மற்றும் ‘தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் இந்தியா' உள்ளிட்ட புகழ்பெற்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

இடதுசாரி எழுத்தாளரான இவர் ‘என்கொயரி' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். பத்ம பூஷன் விருது பெற்ற இவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைக் கல்வி மையத்தின் தலைவராகவும், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினராகவும் மற்றும் தேசிய புத்தக நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

வரலாறு தொடர்பாக இவர் எழுதிய பல பாட புத்தகங்கள் நாட்டின் பல பள்ளிகள், கல்லூரி களில் நெடுங்காலமாகக் கற்பிக்க ப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரின் 86வது பிறந்தநாளில் ‘ஏசியாட்டிக் சொஸைட்டி ஆஃப் பிஹார்' எனும் அமைப்பு இவருக்கு ‘இதிகாச ரத்னா' எனும் விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இவரின் மறைவையொட்டி, பல்வேறு கல்வியாளர்களும், வரலாற்றாசிரியர்களும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து ள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

சுற்றுச்சூழல்

20 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

58 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்