பெண்ணின் பாலியல் துன்புறுத்தலால் மருத்துவமனை ஆண் ஊழியர் மகாராஷ்டிராவில் தற்கொலை

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டம், பர்பானி நகரைச் சேர்ந் தவர் சச்சின் மிட்கரி (38). இவர் அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மிட்கரியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது அவர் கடைசியாக எழுதிய கடிதத் தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில், சக பெண் ஊழியரின் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்வதாக மிட்கரி குறிப்பிட்டிருந்தார்.

‘‘எனக்கு திருமணமாகிவிட்டது. இது அந்த பெண்ணுக்கு தெரியும். ஆனாலும் என்னைப் பாலியல் உறவுக்கு அழைத்து துன்புறுத்து கிறார். நான் மறுத்தால் போலீ ஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று கடிதத்தில் அவர் தெரிவித் திருந்தார்.

தற்கொலைக்கு தூண்டியதாக சம்பந்தப்பட்ட பெண் மீது போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் ‘மீ டூ' இயக்கத்தில் ஆண் களுக்கு எதிராக ஏராளமான பெண் கள் பாலியல் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இதேபோல பெண் களுக்கு எதிராக ‘வி டூ' என்ற இயக்கத்தைச் சில ஆண்கள் தொடங்கியுள்ளனர். அதாவது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண் கள், தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை சமூக வலை தளங்களில் பகிரங்கமாக பதிவிட்டு வருகின்றனர். சச்சின் மிட்கரின் தற்கொலைக்கு காரண மான பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘வி டூ' இயக்க ஆதரவாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்