கேரளாவில் கனமழை, வெள்ள பாதிப்பு: உடனடி நிதி ரூ.100 கோடி; மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் அல்போன்ஸ், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அப்போது வெள்ளம் பாதித்த இடங்களையும், சேத விவரங்களையும் அவர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு விளக்கினர்.

பின்னர் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். பின்னர் மத்திய குழு பார்வையிட்டு தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘கேரளாவில் மழை, வெள்ள பாதிப்பு மிக மோசமாக உள்ளது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். இரண்டு கட்டமாக ஏற்கெனவே 80 கோடி ரூபாய் என்ற அளவில் கேரளாவுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கேரள அரசு கோரியுள்ளது. மத்திய குழு பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட கால தாமதம் ஆகும் என்பதால் உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்