நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ் இருவரும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக்கொலை: புனே நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு தகவல்

By இரா.வினோத்

மகாராஷ்டிராவை சேர்ந்த முற் போக்கு சிந்தனையாளர் நரேந்திர தபோல்கரும், பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக புனே நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே பாணியில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்துத்துவா அரசியலை கடுமை யாக விமர்சித்த இருவரும் ஒரே பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நரேந்திர தபோல்கர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் முக்கிய குற்றவாளியான சுபம் சுரளியை கடந்த 11-ம் தேதி அவுரங்காபாத்தில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜனஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்பினருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நரேந்திர தபோல்கரை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய 7.65 எம்எம் நாட்டு ரக துப்பாக்கியை தனது உறவினர் சச்சின் அந்துரேவிடம் கொடுத்ததாக தெரிவித்தார். சச்சின் அந்துரே அந்த துப்பாக்கியை சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அமோள் காலேவிடம் கொடுத்துள்ளார். காலே, கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆயுதம் வழங்கியதாக கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரி கள் சுபம் சுரளியை நேற்று முன் தினம் புனே சிறப்பு நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அப்போது “தபோல்கரும் கவுரி லங்கேஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வழக் கில் துப்பாக்கியை வழங்கிய சுபம் சுரளிக்கும், அமோள் காலேவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே இருவரையும் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நீதிமன்றம் சுபம் சுரளியை வ‌ரும் 30-ம் தேதி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. சிபிஐ அதிகாரிகளின் இந்த தகவலை தொடர்ந்து கர்நாடக சிஐடி அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள அமோள் காலேவிடம் விசாரிக்க தொடங்கி உள்ளனர். மேலும் அடுத்த சில தினங்களில் சிபிஐ அதிகாரிகளும் பெங்களூரு வந்து காலேவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இத னிடையே இவ்வழக்கில் தலை மறைவாக உள்ள வேறு சிலரை யும், தபோல்கரை கொல்ல பயன் படுத்திய இரு சக்கர வாகனத்தை யும் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

22 mins ago

விளையாட்டு

38 mins ago

வாழ்வியல்

47 mins ago

ஓடிடி களம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்