திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள  தங்க கிரீடம், வெள்ளி பாதுகைகள் காணிக்கை: வேலூர் மாவட்ட பக்தர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க கிரீடமும், வெள்ளிப் பாதுகை களையும் தமிழகத்தின் வேலூர் மாவட்ட சேர்ந்த பக்தர் நேற்று காணிக்கையாக வழங்கினார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த கண்ணய்யாவின் மகன் துரைசாமி யாதவ் என்ற பக்தர் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய் தார். பின்னர் இவர், ரூ.28 லட்சம் மதிப்பிலான 1.10 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தையும் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1.60 கிலோ எடையுள்ள வெள்ளி பாதுகைகளையும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவிடம் காணிக்கையாக வழங்கினார்.

இது குறித்து புட்டா சுதாகர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும் போது, “தங்களின் கோரிக்கை களை தீர்த்து வைக்கும் கலியுக கடவுளான திருப்பதி ஏழுமலை யானுக்கு, பக்தர்கள் காணிக் கைகள் வழங்குவதை நேர்த்திக் கடனாக கொண்டுள்ளனர்.

அதன்படி ஏழுமலையானுக்கு தங்கம், வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக வருகின்றன. மேலும், பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் பக்தர் கள் காணிக்கை வழங்கி தங்களது பக்தியை வெளிப்படுத்தி வரு கின்றனர். இது வரவேற்கத்தக்கது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

10 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்