தாஜ்மஹால் பாதுகாப்பு செயல்திட்டம்; மாசு ஏற்படுத்தும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்ட தாகவும், எனவே அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் எம்.சி.மேத்தா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாஜ்மஹாலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறி மத்திய அரசையும், உத்தரபிரதேச அரசையும் கடுமையாக கடிந்து கொண்டது. அத்துடன், தாஜ் மஹாலை பாதுகாப்பது தொடர் பாக செயல்திட்ட ஆவணம் ஒன்றை தயாரிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுவானது, நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “தாஜ் மஹாலை பாதுகாப்பது தொடர் பான செயல்திட்ட ஆவணம் தயா ரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

நீதிபதிகள் கூறும்போது, ‘தாஜ்மஹாலை சுற்றி 10,400 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பகுதிகளில் மாசு ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த செயல் திட்ட ஆவணம் இருக்க வேண்டும். மேலும், தொலைநோக்கு பார்வை யுடன் தெளிவானதாகவும் அந்த ஆவணம் இருக்க வேண்டியது அவசியம்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்