கேரளாவுக்கு உதவி: இலவச ரயில் சேவையை நிவாரணப் பொருட்களுக்காக அறிவித்துள்ள ரயில்வே துறை

By பிடிஐ

கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லும் அரசு அமைப்புகள், தனியார் அமைப்புகள் அனைத்திற்கும் இலவச ரயில சேவையை அறிவித்துள்ளது மத்திய ரயில்வேத்துறை.

இன்று வெளியிட்டுள்ள ரயில்வே வழிகாட்டுதல் நெறிமுறையில் (கெய்டுலைன்ஸ்) தெரிவித்துள்ள விவரம்:

கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டுசெல்லும் அரசு அமைப்புகள், தனியார் அமைப்புகள் அனைத்திற்கும் இலவச ரயில சேவை வழங்கப்படுகிறது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலவச சேவை பெறும்வகையில் கோட்ட ரயில்வே மேலாளர்களை அணுகும்படியும் ரயில்வே கேட்டுக்கொள்கிறது.

கேரளாவுக்கு நிவாரணப் பொருட்கள் போக்குவரத்துக்கு எந்தவொரு சரக்கு கட்டணமும் கிடையாது. இப்போது கேரளாவில் உள்ள அனைத்து நிலையங்களுக்கும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் செல்லும் வண்டிகளிலும், பார்சல் ஏற்றிச்செல்லும் வண்டிகளிலும் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பயணிகளும் இந்த வழிகாட்டுதலில் இடம்பெறுவர். தங்கள் விரைவான பயணத்தை மேற்கொள்ளும்வகையில் அவர்களுக்கும் உதவும் வகையில் மண்டல மேலாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 வரை இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

50 mins ago

வாழ்வியல்

39 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்