மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி காலமானார்

By பிடிஐ

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி  மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 89.

கடந்த 40 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரகம் பாதிப்பு காரணமாகவும்  கடந்த மாதம் திடீரென அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஐந்து நாட்களாக அவருக்கு வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர்  இன்று காலை உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மக்களவை சபாநாயகராக இருந்தார்.

அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

சோம்நாத் சட்டர்ஜி 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்