வாடகை ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர் தூவ ரூ.14 லட்சம் செலவிட்ட உ.பி. அரசு

By செய்திப்பிரிவு

உத்தராகண்ட் மாநிலம் ஹரித் துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் வரை 130 கி.மீ. தூரம் ஆண்டுதோறும் சிவபக்தர்கள் காவடி ஏந்தி யாத்திரை செல்வது வழக்கம். காசியாபாத்தில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்ய, கங்கை நீரை சுமந்தபடி பல மாநிலங்களில் இருந்தும் பக்தர் கள் வருவார்கள்.

இந்நிலையில், யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களை வர வேற்கும் விதத்தில் ஹெலிகாப்ட ரில் இருந்து அவர்கள் மீது ரோஜா மலர் தூவ உத்தரபிரதேச மாநில உள்துறை உத்தரவிட்டுள் ளது. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் உத்தரவின்படி ‘ஏர் சார்ட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து பக்தர்கள் மீது மலர் தூவியுள்ளனர்.

மீரட் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்கள் வழியாக வரும் பக்தர்கள் மீது கடந்த 7-ம் தேதி முதல் நேற்று வரை மலர் தூவப்பட்டுள்ளது. இதற்காக ஹெலிகாப்டர் வாடகை உட்பட ரூ.14.31 லட்சத்தை உ.பி. அரசு செலவிட்டுள்ளது.

இதுகுறித்து மீரட் மண்டல கூடுதல் இயக்குநர் ஜெனரல் கூறும்போது, ‘‘ஒருவர் மீது மலர் தூவுவது, அவரை வரவேற்பது இந்திய கலாச்சாரம். யாத்ரீகர்கள் மீது மலர் தூவியது என்பது உ.பி. அரசு அவர்களை வரவேற்கிறது என்றுதான் அர்த்தம். இதில் போலீஸார் மத நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோல் நாங்கள் எல்லா மத விழாக்களுக்கும் செய்துள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

இந்தியா

17 mins ago

சினிமா

12 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்