உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், மான், புறா புகைப்படங்கள்

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சன்னிலியோன் புகைப்படம் இடப்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்னிலியோன் படத்துடன் மான், புறா போன்றவற்றின் புகைப்படங்களும் இடப்பெற்றுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் பாலிவுட் திரைப்பட நடிகை சன்னி லியோன் புகைப்படம் 51 வயது உள்ள பெண்ணின் விவரத்துடன் இடப்பெற்றிருந்தது. அத்துடன் யானை, மான், புறா போன்றவற்றின் புகைப்படங்களும் வேறு சில வாக்காளர்களின் விவரங்களுடன் இடம்பெற்றிருந்தன.

தற்போது இந்த விவகாரம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து  மாவட்ட  நிர்வாக அதிகாரிகள் தரப்பில், "இந்த தவறு இங்குள்ள உள்ளூர் ஆப்ரேட்டரால் நடந்துள்ளது. அவர் தற்போது தான்  நகரத்கிலிருந்து கிராமத்துக்கு புதிதாக பணிக்கு சேர்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

53 mins ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

22 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்