‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; 2019- மக்களவை தேர்தல் எதிரொலி’’ - காங்கிரஸூக்கு அமித் ஷா பதிலடி

By செய்திப்பிரிவு

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கபட்டது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் எதிரொலி தான் என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி. கேசி னேனி நிவாஸ் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து இறுதியில் இரவு 9.15 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிக்கு அதிகார பசி ஏற்பட்டுள்ளது என்று அவர் கடுமையாக விமர்சித்தார். சுமார் 90 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.

பின்னர், சுமார் 12 மணி நேர விவாதத் துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கதத்தில் கூறுகையில் ‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்டிக்கப்பட்டதன் மூலம் ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் இந்த வெற்றி எதிரொலிக்கும்.

வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் மோடி அரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். வாரிசு அரசியலுக்கு தோல்வி கிடைத்துள்ளது. காங்கிரஸின் இனவாத, வாரிசு அரசியலை மக்கள் ஏற்கவில்லை’’ எனக் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்