மாணவர் பேரவையை முடக்க சதி: ஜேஎன்யூ நிர்வாகம் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு

By பிடிஐ

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் மாணவர் பேரவையை இல்லாமல் செய்வதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அங்க பயிலும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது நாள்வரை பல்கலைக்கழகத்திற்கு கல்விபயில புதியதாக வருபவர்கள் இயல்பாக மாணவர் சங்கத்தில் சேர்வதற்கு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஒரு புதிய படிவத்தை கொடுத்து அதன்மூலம் மாணவர் பேரவையை இல்லாமல் செய்யும் வேலையை நிர்வாகம் தொடங்கிவிட்டது.தாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜேஎன்யூ மாணவர் பேரவை தெரிவித்ததாவது:

முன்பெல்லாம் மாணவர் பேரவை உறுப்பினராக சேர்வதற்கான கட்டணம் என்பது, பல்கலைக்கழகத்தில் சேரும்போதே வசூலிக்கப்படும் கட்டணம் மாணவர் கட்டணத்திற்குள்ளேயே அடங்கும். தற்போதைய புதிய விதிகளின்படி மாணவர்கள் அவர்களுக்கான மாணவர் பேரவையில் சேரக்கூடாது என்பதை ஊக்குவிக்கும்விதமாக அமைந்துள்ளது.

நிர்வாகம் இதுவரை இல்லாத புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. மாணவர்களுக்கு நிர்வாகம் ஒரு புதிய படிவத்தை வழங்கியுள்ளது. அதில் அவர்கள் மாணவர் பேரவையில் சேர ரூ.15 கட்டணம் செலுத்த விருப்பம் என்பதை அறிவிக்க வேண்டும். அந்த புதிய படிவத்தின் விலை எம்.ஏ மாணவர்களுக்கு ரூ.175, எம்.பில்/பி.எச்டி மாணவர்களுக்கு ரூ.187.

இவ்வாறு மாணவர் பேரவை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்