காவிரியில் தமிழகத்துக்கு 83 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கர்நாடகாவில் தொடரும் கனமழை

By இரா.வினோத்

கர்நாடகாவில் கன மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளும் கடந்த வாரமே முழு கொள்ளளவை எட்டின. இதனால் முதல்வர் குமாரசாமி கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு கடந்த 20-ம் தேதி சமர்ப்பண பூஜை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, மடிக்கேரி, பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதே போல மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 42,050 கன அடி நீரும், கபினி அணைக்கு வினாடிக்கு 31,340 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது.

இதனால் அணையின் பாது காப்பைக் கருதி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினா டிக்கு 52,500 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 31,150 கன அடி நீரும் வெளி யேற்றப்படுகிறது. இரு அணை களில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு வினாடிக்கு 83,650 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள் ளது. இதனால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சுற்றுலா

26 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்