தீவிரவாதியை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை: உடலைப் பெற காத்திருக்கும் காஷ்மீர் பெற்றோர்

By ஐஏஎன்எஸ்

காஷ்மீரில் அடையாளம் தெரியாததால் தீவிரவாதியின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் 29 -ம் தேதி அன்று குப்வாராவில் நடந்த சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அவரது உடலை பாதுகாப்புப் படையினர் அடையாளம் காட்டுவதில் சரியான சான்றுகள்  இல்லாத நிலையில் ட்ரெகம் பகுதியிலேயே அவர் புதைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்ரீநகரின் பர்சுல்லா பகுதியைச் சேர்ந்த கொல்லப்பட்ட  தீவிரவாதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தங்கள் மகனின் புகைப்படத்தை அடையாளம் கண்டுகொண்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதி முடாசிர் அகமது பட் எங்கள் மகன்தான் என்று தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இறந்த தீவிரவாதியின் டிஎன்ஏ  பரிசோதனை  நடத்த வேண்டும் என  அவரது தந்தை  குப்புவாரா மாவட்ட ஆட்சியரை அணுகினார்.

குப்வாரா மாவட்ட ஆட்சியர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்டது.

இந்நிலையில் புதைக்கப்பட்ட தனது மகனின் உடலைப் பெற்று முறையான சடங்குகள் செய்வதற்காக அவரது பெற்றோர் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து காவலர் ஒருவர் தெரிவிக்கையில், ‘‘கொல்லப்பட்ட தீவிரவாதியின் டிஎன்ஏ அவரது தந்தையோடு பொருந்தியுள்ளதாக சான்று அறிக்கை உறுதியாகியுள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். புதைத்த உடலை தோண்டியெடுத்து இன்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்