வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க இணையதள வசதி

By செய்திப்பிரிவு

வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடைகளைக் கண்காணிக்கும் இணையதள வசதியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வருகின்றன. இந்த நன்கொடைகளையும் அவைகளைப் பெற்றுக் கொள்ளும் அமைப்புகளையும் கண்காணிப்பதற்கான இணையதள வசதியை மத்திய அரசு நேற்று தொடங்கி உள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இணையதள வசதியை தொடங்கிவைத்தார்.

அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் நன்கொடைகளைக் கண்காணிக்கும் இணையதள வசதியை மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் முக்கிய அதிகாரிகள் செயல்படுத்த முடியும். வெளிநாட்டு நன்கொடைகள், அவற்றை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். மத்திய அரசின் பதிவு பெற்ற அல்லது வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டம் 2010-ன் படி செயல்படும் நிறுவனங்கள் இந்த நன்கொடைகளை பெறுகிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்